Powered By Blogger

Saturday, July 26, 2025

August Ahoy!!!

நண்பர்களே,

வணக்கம்! "உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக'' என்று உப்மாக்களுக்கும், ஊறுகாய்களுக்குமே பில்டப் கொடுத்திருக்கிறோம் தான்! அட, ஜடாமுடி ஜானதனுக்கே கெத்து காட்டியவனாச்சே அடியேன்?! So மெய்யாலுமே ஒரு அசாத்திய வேளை கண்முன்னே புலர்ந்திடும் சமயம் லைட்டாகக் கூசுகிறது - வூடு கட்டி அடிப்பதற்கு! ஆனால், ஒற்றைப் புள்ளியில் ஒன்றல்ல.., இரண்டல்ல, மூன்றல்ல, நான்கல்ல அரை டஜன் "பெத்த தலக்கட்டுக்கள்!'' ஒன்று கூடும் அதிசயம் நிகழ்ந்திடும் போது கூரையேறிக் கூவாமல் இருக்க முடியாதல்லவா? So ஒரு அட்டகாச, அதகள, அசாத்திய, அதிரடி, அதிரி புதிரி ஆகஸ்டுக்கு ஸ்வாகதம் சொல்லத் தயாராகலாமா folks?

To start with- எப்போதும் போல் "தல'' புராணம்! நடப்பாண்டின் முதல் மெகா நீள TEX சாகஸமாய் "உதிரம் பொழியும் நிலவே!'' -296 பக்க ஆல்பத்தில் களம் காண்கிறது! And கதாசிரியர் மௌரோ போசெலி­! சும்மாவே ஒரு சிங்கிள் ஆல்பத்தைத் தந்தாலே தெறிக்கத் தெறிக்க போட்டுத் தாக்கும் மனுஷனிடம் சுமார் 300 பக்கங்களை ஒப்படைத்தால் விடுவாரா என்ன- சிலம்பம் ஆடியுள்ளார் கதை நெடுக! And துணைக்கு செம ஜித்தரான ஓவியரும் கரம் சேர்க்கும் போது- விளைவு அதகளமாகிடுகிறது! தமிழ் சினிமாவிலி­ருந்து உருவியதொரு one liner போலான கதைக்கரு தான்; ஆனால், அதை போசெலி­ கையாண்டிருப்பதில் தான் என்னவொரு லாவகம்; என்னவொரு ஆற்றல்! 

எண்பதாண்டுகள் கடந்துவிட்டன தான்- டெக்ஸ் வில்லர் என்றதொரு ஆளுமை ஜனித்து! அவரோடு தோள் நிற்போரும் இம்மியும் மாற்றமின்றி அதே மூவர் தான்! And களங்கள் அரிஸோனா; டெக்சாஸ்; மெக்ஸிகோ- என ஒரு வட்டத்தினுள்ளேயே தான் அடைபட்டும் கிடக்கின்றன! எப்போவாச்சும் கனடா; சான் பிரான்சிஸ்கோ என்று நகர்வது பெரிய சமாச்சாரம்! ஆனால், சிம்பிளான இந்த template-ஐ வைத்துக் கொண்டே year after year போனெலி­யின் படைப்பாளிகள் உருவாக்கிடும் இந்த மேஜிக் ஒரு தனி ரகம் தான்! நாற்பது ஆண்டுகளாய் நமக்கு வில்லரைத் தெரியும்; ஆனாலும் ஒவ்வொரு புது ஆல்பத்தின் அட்டைப்படத்தினைப் பார்க்கும் போதும் மனசெல்லாம் மத்தாப்பூ மலர்வது எனக்கு மட்டும் தான் என்றிராது தானே? So கடந்த பத்து தினங்களாய் இந்த 296 பக்க ஆல்பமே கதி என்று கிடந்தவனுக்கு போனெ­லியின் படைப்பாளிகள் மீதான மரியாதை பன்மடங்கு எகிறியுள்ளது என்பதே bottomline! ஆக, ஆகஸ்டில் காத்திருக்கும் முதல் ஜாம்பவான் நம்ம இரவுக் கழுகாரே தான்!

And "ஈரோட்டில் இந்தவாட்டி விழா இல்லாட்டியும் பரால்லே; நாங்க இல்லாம புத்தகவிழா ஜொலி­க்காதே?!''என்று குரல் கொடுப்பது யார் தெரியுமோ? 95 ஆண்டுகளாய் லோகமெங்கும் வெற்றியை மட்டுமே தரிசித்து வந்திருக்கும் டின்டின் & கேப்டன் ஹேடாக் தான்!! Oh yes ஆண்டின் பிற்பகுதிக்கென slot in செய்து வைத்திருந்த டின்டினின் "கேல்குலஸ் படலம்'' அதிரடியாய் முன்கூட்டியே ஆஜராகிறது! டின்டினின் படைப்பாளிகள் வைத்திருக்கும் செம ஆழமான பரிசீலனைகளைத் தாண்டி ஒவ்வொரு ஆல்பத்துக்கும் approval வாங்குவது ஒரு இமாலயக் காரியமே என்பதால் இந்தப் பணிகளை சில மாதங்களுக்கு முன்னமே கையில் எடுத்திருந்தேன்! பெர்சனலாக எனக்கு ரொம்ப ரொம்பப் பிடித்த கதையிது என்பதால்- மே மாதம் முதலாகவே நேரம் கிடைக்கும் போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் எழுத ஆரம்பித்திருந்தேன்! ஆனால், for the sheer length & volume of the story, நாக்கு தொங்கியே போய்விட்டது- தமிழாக்கத்தை பூர்த்தி செய்வதற்குள்! 

And இங்கே ஒரு ஸ்பெஷல் ஐட்டமும் உண்டு- கேப்டன் ஹேடாக்கின் மாமூலான அந்தக் கூப்பாடுகளைத் தாண்டியுமே! கேப்டனுக்கு எங்கே எந்த பழைய curse words போடுவது? புதுசாய் எதைத் தேற்றுவது? என்ற சிண்டு பிய்க்கும் படலம் ஒரு பக்கமெனில் கதைக்கு ஜாலி­யூட்ட ஆஜராகிடும் ஒரு ஓட்டைவாய் இன்ஷுரன்ஸ் ஏஜெண்டுக்கு சற்றே வித்தியாசமாய் டயலாக்ஸ் அமைத்தால் தேவலாமென்று பட்டதால் அதற்கோசரம் டிரௌசர் கழன்று போகாத குறை தான்! சரி.., ரைட்டு - மே மாதம் ஆரம்பித்து, ஜுன் & ஜுலையில் பூர்த்தி செய்தாச்சு; இனி DTP பணி முடித்தால் படைப்பாளிகளுக்கு அனுப்பிவிடலாமென்று பார்த்தால் விதி கெக்கே பிக்கே என்று இளித்தது! தவணை முறையில் செய்திருந்த மொழியாக்கம் என்பதால் கோர்வையில் உதைப்பது போலவும் இருந்தது; கேப்டனின் அனற்றல்களில் ஒரே set of curses அடுத்தடுத்து தலைகாட்டுவது போலவும் இருந்தது! "நடுமண்டையிலே நானூறு நங்கூரங்களை இறக்க - டிக்கியை சேரில் அழுந்தப் பதித்து, ஸ்க்ரிப்டை ரிப்பேர் பண்ணுடா மங்கூஸ்தான் மண்டையா!'' என்று எனக்கு நானே சொல்­லிக் கொண்டு மறுபடியும் டின்டினின் உலகினுள் மூழ்கிப் போனேன்! நம்பினால் நம்புங்கள் மக்களே, கேல்குலஸ் படலத்தின் ஸ்க்ரிப்டை நான் தலை முதல் பாதம் வரை வாசித்தது மொத்தம் பதினேழு தடவைகள்!! ஒருவழியாய் எல்லா மாற்றங்களையும் போட்டு, படைப்பாளிகளுக்கு அனுப்பினால்- Oh wow!! நான்கே நாட்களில் "எல்லாம் ஓ.கே'' என்று பச்சை விளக்கைக் காட்டிவிட்டார்கள்! அப்புறமென்ன- சாமியே வரம் தந்துவிட்ட பின்னே காத்திருக்கவாவது தோன்றுமா? மின்னலாய் தயாரிப்புப் பணிகளுக்குள் ஐக்கியமானோம்! அதே "திக்'கான ஆர்ட் பேப்பர்; மிளிரும் அச்சு; நீட்டான பைண்டிங் என எல்லாமே ஒரு பக்கம் auto pilot-ல் தடதடக்க இரண்டு நாட்களுக்கு முன்பே டின்டின் ரெடி! அப்புறமும் இதை மூட்டை கட்டி வைத்து செப்டம்பருக்கோ- அக்டோபருக்கோ வெளியிடுவது பற்றி நினைத்துப் பார்க்கவாவது முடியுமா? "டப்'பென்று சிக்பில்லை செப்டம்பருக்குத் தள்ளிவிட்டோம்; "டுப்''பென்று டின்டினை ஆகஸ்ட் அட்டென்டன்ஸுக்கு தயாராக்கியாச்சு!

கதை என்று பார்த்தால் - அட்டகாசமான spy த்ரில்லர்! எதிரி நாடுகள்; ஆயுத உருவாக்கம்; ஆள் கடத்தல் - என்றெல்லாம் ஜேம்ஸ் பாண்ட் ரேஞ்சுக்கு இந்த ஆல்பம் அதகளம் செய்திட "பரபர''வென சம்பவங்கள் ஒன்றன்பின் ஒன்றாய் தெறிக்க விடுகின்றன! And ஆக்ஷனுக்கு ஈடு தரும் விதமாய் ஹ்யூமரும் சேர்ந்தே பயணம் பண்ண- இந்த 62 பக்க ஆல்பம் நமக்கொரு மறக்க இயலா வாசிப்பு அனுபவத்தை வழங்கிடவுள்ளது என்பேன்! அடுத்த ஜாம்பவான் பக்கமாய் நான் தாவும் முன்பாக ஒக்க கோரிக்கை மக்கா :

டெம்போவெல்லாம் வச்சு பதினேழு வாட்டி கடத்தியிருக்கோம் ! So அதுக்காகவாச்சும் ஆகஸ்டில் டின்டினை முழுசுமாய்; சீக்கிரமாய் வாசிக்க நேரம் ஒதுக்கப் பாருங்களேன் - ப்ளீஸ்? வழக்கம் போல பொம்ம பார்த்துட்டு - 'புக் சூப்பர்.., ப்ரிண்டிங் செம' என்பதோடு நிறுத்திக் கொள்ளாது இந்தவாட்டி வாசித்திடவும் முயற்சி பண்ணுங்களேன் folks?

இனி ஜாம்பவான் # 3 பற்றிப் பார்க்கலாமா? அது வேறு யாருமல்ல- நம்ம தளபதி தான்! "தங்கக் கல்லறை'' மறு மறுபதிப்பில் வரவிருப்பது நீங்கள் அறிந்ததே! And இங்கே ஒரு சின்ன உவமை சொல்லத் தோன்றுகிறது! 

சர்க்கஸ்களில் உசிரைக் கொடுத்து மேலே ட்ரபீஸ் ஆடிக் கொண்டிருப்பார்கள்! ஒரு பக்கம் மரணக் கூண்டுக்குள்ளே- இன்று வெடித்துக் காட்டும் எலெக்ட்ரிக் பைக்களுக்கு முன்னோடியாட்டம் டுப்பு.. டுப்பு.. டுப்பு.. என்று வெடிக்கும் சைலன்ஸரோடு காந்தி காலத்து மோட்டார் சைக்கிளில் ஒரு மனுஷன் மாங்கு மாங்கென்று ரவுண்டடித்துக் கொண்டிருப்பார்! மக்கள் கூண்டுக்குள்ளும், அந்தரத்திலும் லயித்துப் போயிருக்கும் நொடியில் பேண்ட் செட் முழங்க ஆரம்பிக்க வரிசையாய் ஒரே மாதிரியான சிக் டிரெஸ் போட்ட யுவதிகள் சைக்கிள்களில் கரம் கோர்த்து உட்புகுந்திடுவர்! மறுகணம் மேலே ட்ரபீஸ் ஆடுவோரையும் சரி, மோட்டார் சைக்கிள் பார்ட்டியையும் சரி, மறந்துவிட்டு பார்வைகள் பாப்பாக்கள் மீது லயித்திடுவதுண்டு! அதே போலானதொரு நிகழ்வு இந்த ஆகஸ்ட் கூரியர் டப்பியிலும் நிகழ்ந்தால் நிச்சயம் வியந்திட மாட்டேன்!

படு புஷ்டியாய் ஒரு டெக்ஸ் புக் ரகளை விட...

அட்டகாசத் தயாரிப்புத் தரத்தோடு டின்டின் கலரில் ஜாலங்கள் காட்ட...

ஹார்ட் கவரில் KING's ஸ்பெஷல் அரை டஜன் நாயகர்களோடு அதிரடியாய் மிரட்ட....

இடையே புகுந்திடும் "தங்கக் கல்லறை'' MAXI ஹார்ட்கவர் இதழானது ஒரு கணத்திற்காவது மூச்சை உள்ளிழுக்கச் செய்யாது போனால் நீங்கள் வழுக்குப்பாறைக்கு மிகமிக அருகே வசிக்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்! ஆயிரத்துச் சொச்சம் புக்ஸ் கண்ட அரை மண்டையன் தான்; போட்டிக் கடைகளும் போட்டி போட்டுக் கொண்டு வாங்கி வைத்து விற்கத் துடிக்கும் "பயணத்தின்" அசுர சைஸி­லிருந்து, தம்மாத்துண்டு ஹார்ட்கவர் பாக்கெட் சைஸ் ஸ்பைடர் வரையிலும் தயாரித்தவன் தான்; வண்ணத்தில் XIII தொகுப்புக்களை ஒன்றுக்கு, இரண்டுவாட்டி உருவாக்கியவன் தான்- so பெருசாய் எதற்குமே வாய் பிளக்கும் ரகமல்ல தான்! அதுவும் ஒரு மறு மறுபதிப்பினை அழகு பார்த்துவிட்டு ஓரம் கட்டுவதே எனது வாடிக்கையாக இருந்திருக்க வேண்டும் -moreso ஒரு புத்தம் புதிய டின்டின் களமிறங்கும் இந்த மாதத்தில்! ஆனால்.....

....ஒரு இனம்புரியா வசீகரத்தோடு பைண்டிங்கிலி­ருந்து வந்திறங்கிய புக்ஸை கையில் ஏந்திய நொடியில் ஒரு அசாத்திய மகிழ்வு என்னுள்! இத்தனைக்கும் அதே அட்டைப்படம் தான்; and அட்டையில் கூட ஜிகினா வேலைகள் லேது! ஆனாலும் இந்த ஆல்பத்தைக் கையில் ஏந்திடும் எவருக்கும் அந்த ஈர்ப்பை உணர முடியாது போகாதென்பேன்! 

அட்டைப்படம் செம அழகாய் வந்துள்ளது..!

பைண்டிங் நீட்டாக அமைந்துள்ளது..! 

And உட்பக்கங்களின் பிரிண்டிங் தான் highlight! 

துவக்க நாட்களில் கலரில் அச்சிட நாம் பட்ட பாடுகளை தற்போதைய தரம் இரண்டு மடங்கு பெரிதாக்கிக் காட்டுகிறது! சொல்லப் போனால், 'அது தான் இது- இது தான் அது' என்று நம்ப ரொம்பவே சிரமப்படும்!

And ஒரிஜினல் தமிழாக்கம் - sans the flaws..!

So இந்த மாதம் டின்டின் ட்ரபீஸ் ஆட, டெக்ஸ் மரணக் கிணறில் சாகஸம் பண்ண, King's Special மேஜிக் ஷோ நிகழ்த்த- நடுவாக்கிலே புகுந்து பு­லியார் ஒளிவட்டத்தைக் கபளீகரம் பண்ண நேர்ந்தால் வியப்பே லேது! Trust me when I say this folks- உங்கள் சேகரிப்பில் சர்வ நிச்சயமாய் இருந்திட வேண்டியதொரு இதழ் இது!! இதுவுமே limited edition பதிப்பென்பதை நினைவூட்டுகிறேன் guys!- "பயணம்'' இதழுக்கு நேர்ந்தது போல இங்கும் கடைசி நிமிடத்தில் WWF போடாதிருந்தால் நலம்! 

ஆகஸ்டின் நான்காவது இதழோ அரை டஜன் க்ளாஸிக் நாயகர்களை உள்ளடக்கியதொரு "புஷ்டி பாபு''புக்!! அட்டையில் வேதாளரின் க்ளாஸிக் டிசைன்... உள்ளே மாயாத்மாவுக்கு இரண்டு ஸ்லாட்ஸ்; ரிப் கிர்பிக்கு 2; விங் கமாண்டர் ஜார்ஜுக்கு 2 and மீத மூன்று நாயகர்களுக்கும் தலா ஒன்று! So மொத்தம் 9 கதைகளின் பட்டியல் இதோ;

டிடெக்டிவ் சார்லி­யின் "சிறை மீட்டிய சித்திரக்கதை'' தவிர்த்த பாக்கி எட்டு கதைகளுமே நமக்குப் புதுசு! So நிதானமாய் நெதத்துக்கும் ஒரு சாகஸம் என்று வாசிப்பதாய் இருந்தால் கூட ஒன்றரை வாரங்களுக்கு உங்களை பிஸியாக வைத்திருக்க THE KING's ஸ்பெஷல் ரெடி! Of course இவையெல்லாமே ஒரு தலைமுறைக்கு முன்பான படைப்புகள் என்பதால் க்ளாஸிக் நெடி இல்லாது போகாது! ஆனால் Electric'80s தனித்தடமே க்ளாஸிக் பார்ட்டீஸ்களுக்கானது என்பதால்- அதனை புராதனம் குறித்து விமர்சிப்பதில் அரையணா பலனிராது! "இங்கே தயிர் சாதமும், வடாமும் தான் மெனு'' என்று போர்ட் போட்டிருக்கும் போது - 'டக்கில்லோ லேது; கபாப் இல்லே!' என்ற விசனங்கள் will be completely out of place! இதற்கென இன்னமுமே ஒரு வாசக அணி இருந்திடுவதால் அவர்களது ratings தான் இவற்றின் எதிர்காலங்களைத் தீர்மானிக்கும்! 

So ஒரு மெகா விருந்து இந்த ஆகஸ்டில் வெயிட்டிங் மக்களே! அடுத்த வியாழனன்று டெஸ்பாட்ச் இருந்திடும்! அடுத்த வாரயிறுதியினை முதற்கட்டமாய் கை நிறையக் குயந்தைகளோடு காட்சி தரும் உங்களது Selfies மூலமாய் தெறிக்க விடலாமா?

Bye all... See you around! Happy Weekend!


Saturday, July 12, 2025

வருது..வருது..காமிக்ஸ் கேரவன் வருது..!

 நண்பர்களே,

வணக்கம்! இரண்டு நாட்களுக்கு முன்பானதொரு நிகழ்வு..! சென்னையைச் சார்ந்ததொரு மூத்த குடும்பத்தலைவி..! நெய்வே­லி பக்கத்தில் சொந்த ஊர் போலும்...! ஆன்லைனில் டிஜிட்டல் கலரிங் பணிக்கு அநாமதேயமாய் நாம் ஆட்களைத் தேடி வர, அவரும் விண்ணப்பித்திருந்தார்! 

'என்ன மாதிரியான பணி? முழு நேரப் பணியா? என்ன மாதிரி அவகாசம் தருவீர்கள்?' 

என்றெல்லாம் வினவிக் கொண்டிருந்தார்! "மேடம்.. இது காமிக்ஸ் புக்குக்கு கலரிங் செய்யும் வேலை' என்று பதில் சொன்னேன்! "You know.. I recently bought some Tamil Comics... என்ன மாதியான தரம் தெரியுமா? அதும் சின்னப்பிள்ளைகளுக்கென Fairy Tales-லாம் கலரில்.. truly wonderful! அதுமட்டுமில்லாம டின்டின் கூட அற்புதமா தமிழிலே வருது தெரியுமா? Awesome! நீங்க அது மாதிரி try பண்ணுங்க சார்!" என்று சிலாகித்தார்! இந்த ஆட்டோ ஆறுமுகம் தான் அந்த பாம்பே ஆன்டனி என்பதை அவர் தெரிந்திருக்கவில்லை & எனக்குமே "இவன் தான் அவர்ர்ர்ர்ர்ர்.. அவர்ர்ர்ர்ர்ர் தான் இவன்'' என்று அள்ளிவிடத் தோன்றவில்லை! அவர் தெரிவித்த சமாச்சாரங்களை மட்டும் அசை போட்டேன்- மனம் நிறைந்த மகிழ்வுடன்! ஆண்டின் புத்தகவிழா சீஸன் துவங்கியிருக்க, நெய்வேலி­யில் நமது ஸ்டா­லில் தான் மேற்சொன்ன புக்குகளை அந்த இல்லத்தரசி வாங்கியிருக்க வேண்டுமென்பது புரிந்தது! சந்தாக்கள்; ஆன்லைன் கொள்முதல்கள்; மாமூலான கடைகளில் வாங்குவோர் என்ற லி­ஸ்டைத் தாண்டி இத்தகைய முற்றிலும் புது வாசகர்களை எட்டிப் பிடிக்க புத்தக விழாக்கள் தரும் வாய்ப்பானது எத்தனை அற்புதமானதென்பது அந்த நொடியில் இன்னமும் அழுந்தப் புரிபட்டது! தவிர, நம்மிடமுள்ள அந்த sheer variety தான் புத்தகவிழாவுக்கு வருகை தரும் புதியவர்களை(யும்) வசியம் செய்கிறதென்பதுமே புரிந்தது! வாசிக்கத் துவங்கும் வாண்டுகள் முதல் லூட்டியடிக்கும் யூத்கள், ரவுசடிக்கும் பெருசுகள் என இங்கே எல்லோருக்குமே ஏதேனும் இருக்குமென்பது ஒவ்வொரு ஊரிலும் நமக்கான அடையாளமாகி வருகிறது! இதோ- அடுத்த வாரம் துவங்கக் காத்துள்ள கோவை புத்தக விழா தான் நமது காமிக்ஸ் கேரவனின் அடுத்த நிறுத்தம்!

And இந்தாண்டு முதலாய் ஈரோடு & சென்னை விழாக்களுக்கு மட்டுமே ஸ்பெஷல் ரிலீஸ்கள் என்றில்லாது - பெருநகரங்கள் சகலத்திற்கும் ஏதேனும் specials போட்டுத் தாக்குவதெனத் தீர்மானித்துள்ளோம்! So:

கோவை  : 1

ஈரோடு    : 1 

திருச்சி    : 1

மதுரை    : 1

சேலம் : 1

திருப்பூர் : 1

என ஒரு ஸ்கெட்ச் போட்டு வைத்துள்ளோம்! And கோவைக்கு ஒற்றை வாரம் கூட இல்லை எனும் போது- அதற்கான ஸ்பெஷல் ரெடியாகிடாது போகுமா -என்ன?

இதோ: தி டெரர் லைப்ரரி! க்ளாஸிக் திகில் சிறுகதைகளின் தொகுப்பாய்- Black & white-ல் !  இந்த இதழின் ஹைலைட்டே அட்டைப்படம் தான் என்பேன்! நண்பர்களை AI உதவியோடு திகிலாய் ராப்பர் ஒன்றினை டிசைன் செய்து அனுப்பச் சொல்லி­ நமது வாட்சப் கம்யூனிட்டியில் கேட்டிருந்ததும் - தொடர்ந்த மூன்று நாட்களுக்கு கலர் கலராய் கும்மியடித்த கையோடு குஸ்தியும் போட்டுக் கொண்டது நினைவிருக்கலாம்! கடைசியாக பஞ்சாயத்து வேறு மாதிரியான வர்ணமெடுத்துப் போக - ஜமுக்காளத்தை மடிச்சுப்புட்டுக் கிளம்பும்படி ஆகிப் போனது! ஆனால், அன்று கிட்டியதொரு டிசைனிலிருந்து கொஞ்சத்தை மட்டும் சுட்டு, நம்மள் கி AI டிசைனோடு கலந்து கட்டி, அமெரிக்க ஓவியையிடம் ஒப்படைத்தோம்! இதோ அவர் போட்டுத் தந்த ரகளை! And கொஞ்சமாய் இரவல் வாங்கியது யாரது டிசைனிலி­ருந்து யூகிப்போருக்கு குச்சிமுட்டாய்  அடுத்த புத்தகவிழா சந்திப்பின் போது!

ரைட்டு.. கோவை விழா பற்றிப் பேசியாச்சு! அடுத்த சம்பவமானது- வழக்கம் போல பூமியை அதிரச் செய்து Star Sports சேனலை சேலம் நோக்கிப் படையெடுக்கச் செய்திடும் ஒரு ரணகளம்! அது தான் நம்ம மட்டைப்பந்து வீரர்களின் காமிக்ஸ் க்ரிக்கெட் லீக்! வரும் 20-ம் தேதி ஞாயிறு காலையில் சேலத்தையே அது ஸ்தம்பிக்கச் செய்யாட்டியும், ஒரு நாற்பது வூடுகளில் "அப்பாடா... ஒரு நாளைக்கு நிம்மதி!'' என்று விடப்படும் பெருமூச்சுகளால், மாவட்டத்தின் தட்பவெப்ப நிலைகளிலேயே பெரு மாற்றம் நேரிடக் கூடுமென்று வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்! பற்றாக்குறைக்கு மேக்னஸ் கார்ல்ஸனுக்கே "பெப்பே'' காட்டுமொரு செஸ் போட்டியும் அன்று நடக்கவிருப்பதால் சேலம் ஒரே பிஷி! நமக்கு ஒரு வாரம் முன்பாகத் தான் மேற்படி சம்பவங்கள் பற்றித் தெரிய வந்ததென்பதால் 'விலாவை' சிறப்பிக்க பயணம் பண்ணப் பார்க்கணும்! இடைப்பட்ட பொழுதில் நம்ம முழங்கால் சன்னமாய் சண்டித்தனம் பண்ண, ஆறேழு ஆண்டுகளுக்கு முன்னே கோவை டாக்டரொருவர் முட்டியில் முறுக்குப் பிழிந்து பார்த்த வைபவங்கள் கண் முன்னே வந்து-வந்து போயிங்! So பார்க்கலாமே என்றுள்ளேன் இந்த நொடியினில்!

நெக்ஸ்ட் ஸ்டாப் ஈரோடு! கடந்த இரண்டு ஆண்டுகளாய் முத்து 50 ; லயன் 40 என்ற மைல்கற்களை ரகளையாய் கொண்டாடியிருந்தோம், ஈரோட்டின் சந்திப்பினில்! இம்முறை அத்தகைய landmarks ஏதும் கிடையாதென்பது ஒருபுறமிருக்க, சீனியர் எடிட்டரின் மறைவு மாமூலான அந்தக் குதூகலங்களுக்குத் தடா போட்டுள்ளது! And நவம்பரில் "சாம்ப­லின் சங்கீதம்'' சேலத்தில் ரிலீஸ் செய்வதாக இந்த நொடியில் திட்டமிருப்பதால் அங்கொரு முறையான வாசக சந்திப்பை ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்று மனசுக்குப்பட்டது! So இப்போதைக்கு ஈரோட்டில் சும்மா ஜாலியாய் ஒரு மீட்டிங்கை மரத்தடியிலோ; ஜுனியர் குப்பண்ணாவிலோ போட்டு ஈரோடு ஸ்பெஷலை ரீ­லிஸ் செய்துவிட்டாலென்ன folks? 

ஆகஸ்ட் முதல் தேதிக்கு புத்தகவிழா துவங்குகிறது & நாம் எப்போதுமே அதன் மறுநாளில் (சனியன்று) சந்தித்திடுவோம்! இந்தவாட்டியும் அதே தேதி ஓ.கே எனும் பட்சத்தில் நானும், ஜுனியரும் ஈரோட்டில் ஆஜராகியிருப்போம்! ஆகஸ்ட் மூன்றாம் தேதி ஞாயிறு- ஆடிப்பெருக்கு என்பதால் அன்று எல்லோருக்குமே வீட்டில் நேரம் செலவிடும் அவசியங்கள் இருக்கக் கூடும்! And எனக்குமே மூத்த சகோதரியின் இல்லத்திலொரு விசேஷம் இருக்கிறது! So ஆகஸ்ட் 2 சனி ஓ.கே என்றால் that will work for us!

சரிதான்டா தம்பி.. ஆனா, ஈரோடுக்கான ஸ்பெஷல் என்னான்றீங்களா? கொஞ்ச மாதங்களுக்கு முன்னே- prime மறுபதிப்பாய் நீங்கள் பார்க்க விழைவது எதையோ? என்று வாட்சப் கம்யூனிட்டியில் கேட்டிருந்தேன்! எதேதோ ரகளை தொடர்ந்தன; And ஒற்றை இதழுக்கு அதிரடியாய் ஆதரவு இருந்தது! அந்த நொடியில் ஏதோ சொல்­லி நான் சப்பைக்கட்டு கட்டியிருந்தேன் தான்; but நிறைய நண்பர்களுக்கு அன்று வருத்தமென்பது புரியாதில்லை! So அன்றே தீர்மானித்தேன் - அமையும் முதல் சந்தர்ப்பத்தில் அதை உங்களிடம் ஒப்படைப்பதென்று! So here Comes "தங்கக் கல்லறை'' MAXI சைஸில்; ஹார்ட் கவர் பைண்டிங்கில் & ரொம்பவே முக்கியமாய் ஒரிஜினல் மொழிபெயர்ப்புடன்!

"அதென்ன 'ஒரிஜினல் மொழிபெயர்ப்புடன்" என்ற அழுத்தம்? மறுபதிப்புகளுக்கு ஒரிஜினல் மொழிபெயர்ப்பு தொடர்வது தானே இயல்பு? " என்று புதியவர்களுக்கு தோணலாம்....! பச்சே 12 வருஷங்களுக்கு முன்னே பிக்னிக் சந்துக்கு பால் காய்ச்சி, வலது காலை எடுத்து வைக்கச் செய்து நம்மளை உள்ளே இட்டுப் போய், பூரணகும்ப மருவாதிகள் நடத்தியதெல்லாம் நம்ம பெருமைமிகு வீர வரலாற்றின் ஒரு மைய அத்தியாயம் என்பதை ஆர்வலர்கள் அறிவர்! So இன்னொரு தபா பிக்னிக் போவானேன்? என்ற முன்ஜாக்கிரதையுடன், தங்கக் கல்லறை இதழின் ஒரிஜினல் மொழிபெயர்ப்பையே கையாண்டுள்ளோம் - பிழைகளை மட்டும் நீக்கி விட்டு! 1990'களில் வெளியான அந்த ஒரிஜினல் தமிழாக்கத்தில் நிறையவே தவறுகள் இருந்துள்ளன தான் ; ஆனால் அந்நாட்களில் அவற்றை நாம் பெருசாய் கவனிக்கலை போலும் & பழசின் மீதான மோகத்தில் 'பெட்ரோமேக்ஸ் லைட்டே தான் வேணும்' என்று பின்னாட்களில் அடமும் புடித்துள்ளது இன்று ஸ்பஷ்டமாய் தெரிகிறது! So ஒரே கதையினை 1990-களில் ஒரு தபா ; 2010-களில் இன்னொரு தபா & 2020-களில் மூணாவது தபாவாய் தலை முதல் தூர் வரை எடிட் செய்துள்ள பெருமை இந்த ஏட்டு ஏகாம்பரத்துக்கே 💪💪...!

இங்கிலீஷில் "you're loco" என்று திட்டுகிறான் ஒரு கௌபாய் - அதாவது "நீயொரு லூசு" என்று பொருள்படும் விதத்தில்! கருணையானந்தம் அங்கிளுக்கு இது புரிந்திருக்கவில்லை ; so "நீயொரு லோக்கோ" என்றே தமிழில் எழுதியிருக்கிறார், அந்த முதல் பதிப்பில் ! அடியேனும் அதைக் கவனித்திருக்கவில்லை and நீங்களுமே தான். So பிழையோடே வண்டி அன்று ஓடியுள்ளது. 2013-ல் வெளியான நமது இரண்டாவது பதிப்பில் இது போலான பிழைகளைத் திருத்தியது மட்டுமன்றி, மொத்தமாகவே ஒரு புது வார்ப்பில் மொழியாக்கத்தை கருணையானந்தம் அங்கிளும், நானும் மாற்றி அமைத்திருந்தோம் ! பொஸ்தவம் வெளியான பின்னே விழுந்தது பாருங்கோ சாத்து மழை - ஆத்தாடி !! ஆயுசுக்கும் மறவாது ! அதிலும் லுங்கியோடு தலைகீழாய் மரத்தில் தொங்கும் ஒரு புனிதர் துவைத்த துவை Surf Excel க்கு tough தரும் ரகம் ! So இன்று பிழைகளைக் களைந்து, மற்றபடிக்கு அதே பெட்ரோமேக்ஸ் லைட்டோடு ஆஜராகிடவுள்ள இந்த சிறப்பிதழின் முதல் பிரதியினை அந்த ஈரோட்டு பவர் ஸ்டாரிடம் ஒப்படைத்தால் தான் நமக்கு நிம்மதி ! So ஆகஸ்ட் 2-ம் தேதிக்கு முயற்சிப்போமா மக்களே ? 

அப்புறம் இதோ - கலரில் 2 விதங்களில் அட்டைப்பட image !! அதே ப்ளூவா ? இல்லாங்காட்டி சிகப்பா ? என்பதைச் சொல்லுங்களேன் please ? அதே போல "தங்கக் கல்லறை" என்ற எழுத்துருவினையும் நண்பர் ஜகத் எழுதி அனுப்பிட்டால் போட்டுத் தாக்கிடலாம் ! திங்களன்று அச்சுக்குச் செல்கிறோம் ; so blue ?  red ? என்ற தேர்வு ஜல்தியாய் ப்ளீஸ் ?


அப்புறம் உங்களுக்கும், எனக்கும் கொஞ்சமாய் நேரத்தை மிச்சப்படுத்த கேள்வியும் நானே ; பதிலும் நானே பகுதி :

1 .எவ்வளவோ மறுபதிப்புகள் பெண்டிங் கீது ! இதை இப்போ அவசரமா கேட்டது யாருய்யா ?

சில ஆண்டுகளின் கோரிக்கை இது சாரே ! And ஒச்சமாகவே நின்று வந்ததொரு குறைப்பாட்டை சரி செய்த நிம்மதி கோரியும் இந்த மறுபதிப்பு !

2 .சூப்பர் மேக்சி சைசில் போடலே...இதெல்லாம் என்னத்த உருப்பட ?

"பயணம்" ஒரு அசாத்தியம் ! So சூப்பர் மேக்சி சைஸ் இலையில் விருந்து ! அதே சைஸ் இலையை ஒவ்வொரு தபாவும் விரிப்பதாய் இருந்தால் அஜீரணமே மிஞ்சும் ! So அஜீஸ் ப்ளீஸ் !

3.இப்டி மறுபதிப்பாய் போட்டு உசிரை வாங்குற நேரத்துக்கு நாலு கி.நா.போட்ருந்தாலாச்சும் போற பாதைக்கு வெளிச்சம் கிடைச்சிருக்கும் ! இதெல்லாம் எங்கே போய் முடிய போகுதோ ?

எங்கேயும் போய் முடியாதுங்கோ ; "பயணம்" out of the blue வந்தது போலவே நமது நெடும் பயணத்தில் இன்னும் நிறைய கி.நா.க்கள் வரவே செய்யும். புத்தக விழா ஸ்பெஷல்ஸ் எப்போதுமே விற்பனைகளின் மீது மையல் கொண்ட முயற்சிகள் என்பதால் - கிடைக்கும் ஒரு சந்தர்ப்பத்தில் ரெண்டணாவாச்சும் பார்த்துக் கொண்டால் தப்பில்லீங்களே ? 

ரைட்டு...டெரர் லைப்ரரி ; அப்பாலிக்கா தங்கக் கல்லறை ; நடுவே டின்டின் என்று அடித்துள்ள பல்டிகளில் ஆகஸ்ட் ரெகுலர் இதழ்களுக்குள் இன்னமும் நுழையவே நேரம் கிட்டியிருக்கவில்லை ! இதோ - சிக் பில் & டாக் புல்லுக்கு குரல் கொடுக்க வாய்ஸ் ரெக்கார்டரோடு வீட்டின் ஒரு பொந்துக்குள் புகுந்திடக் கிளம்புகிறேன் ! பக்கத்து வீட்டில் யாருக்கேனும் கேட்டால் ஏர்வாடிக்கு எத்தினி மணிக்கு பஸ் ? என்ற விசாரிப்பில் இறங்கிடுவர் என்பது உறுதி ! But அதையெல்லாம் பார்த்தா பொழப்பு ஓடுமா ?

Bye folks ..have a cool weekend ! See you around ! 

Saturday, July 05, 2025

ஜாலி ஜூலை!

நண்பர்களே,

வணக்கம்! இந்த முறை மாதத் துவக்கமானது வாரத்தின் துவக்கத்தோடு கைகோர்த்துப் போனதால் டெஸ்பாட்ச் உங்களது பிஸியான பொழுதுகளிலேயே அமைந்திடுவதை தவிர்க்க இயலவில்லை! So உங்களில் நிறையப் பேருக்கு அச்சு மையின் மணத்தை நுகர்ந்திடவும், பக்கங்களைப் புரட்டி- "பொம்ம'' பார்க்கவுமே நேரம் பற்றியிருக்காது தான்! இதோ இந்த வாரயிறுதியினை "தல'' அல்லாததொரு மாதத்தின் படைப்புகளை சுவாசிப்பதனில் செலவிட்டீர்களெனில் நாங்க ஹேப்பி அண்ணாச்சி!

"இந்த மாதத்தின் highlight" என்பதை விடவும், லக்கி லூக் டபுள் ஆல்பத்தினை - "ஆண்டின் hightlight-களுள் முக்கியமானது'' என்று சொல்லவே எனக்குத் தோன்றுகிறது! Becos லக்கி லூக் வெளிவரும் ஒவ்வொரு சந்தர்ப்பமுமே கொண்டாடப்பட வேண்டியதொன்று! தடி தடியாய் கௌபாய்கள்; டிடெக்டிவ்கள், சாகஸ வீரர்கள் என்று உலவிடும் நமது காமிக்ஸ் பிரபஞ்சத்தில் கடந்த முப்பத்தி எட்டு ஆண்டுகளாய் தனது பிரத்தியேக பாணியில் கார்ட்டூன் கொடியினை ஒண்டி ஆளாய் உயரப் பிடித்து நிற்பதென்பது சாமான்யக் காரியமே அல்ல தானே? எண்ணற்ற கார்ட்டூன் நாயகர்கள் இதே வட்டத்தின் முன்னே ஆஜரான வேகத்திலேயே - "ஆட்டம் க்ளோஸ்டா மாப்பு'' என்றபடிக்கே மூட்டையைக் கட்டவுமே செய்துள்ளனர்! ஆனால், வெயிலோ, மழையோ, முதல் இன்னிங்ஸோ, இரண்டாம் இன்னிங்ஸோ- இம்மி கூட "தம்'' குறையாது தாக்குப் பிடித்து நிற்கும் இந்தக் கார்ட்டூன் ஜாம்பவான் in his own rights ஒரு சூப்பர் ஸ்டார் ஆச்சே?! So அவரை ரசித்திடக் கிடைக்கும் ஆண்டின் ஒரே சந்தர்ப்பத்தை உற்சாகமாய் கொண்டாடுவதில் தப்பே இல்லை தானே?!

பெர்சனலாக 40+ ஆண்டுகளுக்கு முன்பாய் "சூப்பர் சர்க்கஸ்' இதழின் ஆங்கிலப் பதிப்பைப் பார்த்த தருணத்தில் எவ்விதம் அகம் மகிழ்ந்ததோ- அதற்குக் கிஞ்சித்தும் குறைவின்றி இன்றளவிற்கும் இந்தத் தொடர் மகிழ்விக்கத் தவறுவதே இல்லை! And கடந்த பத்தாண்டுகளாய் லக்கியின் மொழிபெயர்ப்புகளை முழுமையாய் கையில் எடுத்துக் கொண்ட பிற்பாடு லக்கி- டால்டன்கள்- ஜாலி- ரின்டின் கேன் யூனிவர்ஸில் இன்னமுமே பக்காவாய் ஐக்கியமானது போலொரு உணர்வு உள்ளுக்குள்! Oh yes - துவக்கக் காலகட்டங்களில் லக்கிக்குப் பேனா பிடித்தது நானே; ஆனால், "மாதம் நான்கு புக்ஸ்'' என்று 1988 வாக்கிலேயே இழுத்துப் போட்டுக் கொண்ட பிற்பாடு கருணையானந்தம் அங்கிள் வசம் அந்தப் பொறுப்பு சென்றிருந்தது! இன்று பல லக்கி இதழ்களை மறுபதிப்புக்கென கையில் எடுக்கும் போதெல்லாம் ரொம்பவே சபலம் தட்டும் - முழுசையுமே fresh ஆக இன்னொருக்கா, நம்ம பாணியில் எழுதினாலென்னவென்று! ஆனால், 'அக்டோபர் 2013' அவ்வப்போது மனத்திரையில் நிழலாடிப் போவதால்- "தங்கக் கல்லறை'' ஸ்டை­லில் ஒரு மெகா பிக்னிக் ஸ்பாட்டுக்கு மறுக்கா போக வேணாமே என்று மனசு எச்சரிக்கை பண்ணும்!

இம்மாத Lion ஆண்டுமலர் # 41-ல் உள்ள இரண்டு கதைகளும் அங்கே ஹாட்லைனில் நான் குறிப்பிட்டது போல 2 வெவ்வேறு காலகட்டங்களில் உருவானவை! சித்திரங்களில் மட்டுமன்றி ஸ்டை­லிலுமே மாற்றங்கள் பார்த்திருப்பீர்கள்! முதல் கதையில் லக்கியின் இதழ்களில் ஒரு "தம்'' சதா நேரமும் ஓட்டிக் கிடக்கும்! இரண்டாவதிலோ ஒரு நீளமான புல் மாத்திரமே! "புகை பிடித்தல்'' ஆரோக்கியக் கேடு எனும் போது, ஒரு உலகளாவிய நாயகரை கதை நெடுக சிகரெட்டோடே உலவ அனுமதிப்பது தப்பான முன்னுதாரணமாகிடும் என்ற புரித­லில் படைப்பாளிகளே செய்திட்ட மாற்றத்தை "நல்ல காலம் பிறக்குது'' கதையில் பார்க்கலாம்! 

கதையைப் பொறுத்த வரையில் இரண்டுமே சர்வ நிச்சயமாய் "புரட்சித் தீ''.. "சூப்பர் சர்க்கஸ்''... "பொடியன் பில்லி­'' ரேஞ்சுக்கான cult classics அல்ல தான்! ஆனால், 83 ஆல்பங்களில், கிட்டத்தட்ட 81 ஆண்டுகளாய் ஒரு தொடரினை இட்டுச் செல்லும் போது சில ups & downs சகஜமே! அதிலும் "The Prophet'' என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளியான "நல்ல காலம் பிறக்குது'' புதுயுகக் கதாசிரியரின் கைவண்ணம்! So தொடரின் ஜாம்பவான்களின் ஸ்டை­லில் கதை நெடுக சிரிப்பை அள்ளித் தெளிப்பதில் அவருக்கு அனுபவம் பற்றாது தான்! ஆனாலும், டால்டன்களும், ரின்டின் கேனும் கதை நெடுக வலம் வருவதால் ஆங்காங்கே புடைப்பான நம்ம மூக்கை உட்புகுத்தி humor content-ஐ உசத்திட முயற்சித்துள்ளேன்! Cinebook-ன் இங்கிலீஷ் இதழையும், நமது தமிழ் பதிப்பினையும் படித்திடும் பட்சத்தில், இது நன்றாகவே புலனாகிடும்..!

"ஒரு நாயகன் உதயமாகிறான்'' கதையோ ஜாம்பவான் கோஸினியின் படைப்பெனும் போது, மருவாதியாய் அவர் போட்ட கோட்டிலேயே ரோடைப் போட்டு வண்டியை செலுத்தியிருந்தேன்! இந்த வாரயிறுதியினையும் சரி, தொடரவுள்ள வார நாட்களையும் சரி, நமது கார்ட்டூன் தலைமகனின் அலச­லில் நீங்கள் செலவிட்டால் அட்டகாசமாகயிருக்கும்! Give it a shot folks?

இம்மாத ஆக்ஷன் நாயகரான "டேங்கோ'' செம raw ஆனதொரு அதிரடியில் ரகளை செய்திருப்பதை படங்களைப் புரட்டும் போதே புரிந்திருப்பீர்கள்! வரலாற்றின் சில பல அனாமதேயப் புள்ளிகளைத் தேடிப் பிடித்து, அவற்றோடு நமது கதை நாயகர்களையும் இணைக்கும் விதமாய் கதைகளை உருவாக்குவதெல்லாம் சுலப வேலையே அல்ல! ஆனால், நமது ப்ரான்கோ- பெல்ஜியப் படைப்பாளிகளுக்கோ அது இளவரசர்களின் சமோசா மொசுக்கும் ஆற்றலைப் போல, மெச ஜுஜுப்பி மேட்டரே! Operation Condor!! 1970-களின் மத்தியில் தென்னமெரிக்காவில் கட்டவிழ்க்கப்பட்ட ஒரு இராணுவ நடவடிக்கை போலும்! முதன்முறையாக "வேட்டை மறக்கா மறக்கா வல்லூறுகள்'' ஆல்பத்தில் தான் இந்த ஆபரேஷன் பற்றி வாசித்தேன்! முன்பெல்லாம் இது போலான கதைச் சம்பவங்களைப் பற்றிப் பெருசாய் ஆராய்திட வழியும் இராது; எனக்குத் தோன்றவும் செய்திடாது! ஆனால், திருவாளர் கூகுள் மட்டுமன்றி, அவரது சித்தப்பு, பெரியப்பு என இன்று எண்ணற்ற செயற்கை அறிவுக்கிட்டங்கிகள் ம­லிந்து கிடப்பதால், அரை நொடி செலவிட்டாலே கதாசிரியர்களின் ஆய்வுகளின் ஆழங்கள் புலப்பட்டு விடுகின்றன! So கதையினூடே பணியாற்றும் போது தான் இந்த Operation Condor ஒரு டப்ஸா பெயரல்ல; மெய்யாலுமே நிகழ்ந்ததொன்று என்பது புரிந்தது! அதை அத்தனை லாவகமாக கதைக்குள் புகுத்தி, நமது கதை மாந்தர்களை அதனோடு களமாடச் செய்வதெல்லாம் stroke of genius என்பேன்! நீங்களுமே இந்த டேங்கோ ஆல்பத்தினுள் பயணிக்கும் போது, இந்தப் பின்னணிகளைப் பற்றித் தெரிந்து கொள்ள நேரம் செலவிடுங்களேன் folks? அடுத்தவாட்டி உங்க நட்புக்கள் "இன்னுமாடா மாப்ளே இதையெல்லாம் படிக்கிறே?'' என்று லந்தடிக்கும் போது, "லேடன் தெரியுமா? பின்ன்ன்ன் லேடன்!'' என்ற ரேஞ்சுக்கு கவுண்ட்டர் கொடுக்க புதுசாயொரு மேட்டர் கிட்டியது போலி­ருக்கும்!

Last but not the least- இளவரசி!! காலத்தால் கரையா யௌவனமும், நேர்த்தியும், கீர்த்தியும் கொண்ட நமது பிரதம நாயகியின் MAXI ஆல்பம்! 2 தெறி புது சாகஸங்கள்; இரண்டு அம்மாஞ்சி புது Boyfriends! இது போதாதா- செமத்தியான வாசிப்புக்கு? ஏற்கனவே வாங்கியிருக்கா பட்சத்தில்- இப்போது ஆர்டர் போடுங்கள் மக்கா- you won't regret it for sure! 

Moving on, நம்ம புத்தக விழா கேரவன் இந்த நொடியில் நெய்வேலியில் நிலைக்கொண்டுள்ளது! கூப்பிடு தொலைவில் கோவையும், அதைத் தொடர்ந்து ஈரோடும் வெயிட்டிங் எனும் போது புத்தக விழா ஸ்பெஷல்ஸ் பணியில் இவ்விட ஒரே பிசி! அடுத்த வாரம் அவற்றைப் பற்றிப் பார்க்கலாமா?

இப்போதைக்கு உங்கள் சிந்தனைக்கு இதோ ஒரு picture quiz.... 🥹🥹

Have a wonderful weekend all... முன்கூட்டிய முகர்ரம் வாழ்த்துக்கள்! Bye for now!

Saturday, June 28, 2025

க. கா.? Po. Pa??

 நண்பர்களே,

வணக்கம்! "பயணம்'' அதற்குள்ளாக ஒரு தூரத்து நினைவானது போலுள்ளது- அடுத்தடுத்த பணிப் பயணங்களில் ஈடுபடும் மும்முரத்தில்! இதோ- ஜுலையில் ஒரு நேர்கோட்டு வாசிப்பு மாதத்துக்கு all is set! But first things first..!

நம்ம 53 ஆண்டு காமிக்ஸ் பயணத்திற்கு சைசில் மாத்திரமன்றி- விற்பனையின் துரிதத்திலுமே "பயணம்'' ஒரு மைல்கல்லாகிடும் போலும்! புத்தக விழாக்களில் விற்பனைக்கு / விளம்பரத்துக்குத் தேவை என கொஞ்சூண்டு புக்சை மட்டும் ஒதுக்கி வைத்துள்ளோம் - மற்றபடிக்கு ஸ்டாக் போயிண்டே! Of course - ­லிமிடெட் எடிஷன் தான்; சின்னதொரு ப்ரிண்ட்ரன் தான்! But still - மிரண்டே போனோம்-விற்பனையில் தெறித்துள்ள அனலைக் கண்டு! அதிலும் கணிசமான நண்பர்கள் மூன்று; நான்கு என்றெல்லாம் ஆர்டர் செய்துள்ளனர்- தத்தம் நட்பு வட்டங்களில் பகிர்வதெற்கென்று! இத்தனை பெரிய சைஸ் கையாள சுலபமே அல்ல தான்; சேமிப்பிற்கும் கஷ்டமே என்பது புரிகிறது! ஆனால், இந்த இதழை "ஹிட்'' என்ற நிலையிலி­ருந்து "சூப்பர்-டூப்பர் ஹிட்!'' என்ற நிலைக்கு உயர்த்தியிருப்பது அந்த மெகா சைஸ் தான் என்பேன்! என்ன ஒரே வருத்தம் - இது போலான எனது குட்டிக்கரணங்களை ரொம்பவே ரசிக்கும் சீனியர் எடிட்டரில்லை - இன்று இந்த இதழின் முதல் பிரதியை ரசித்திட..!

Down the line - என்னிடம் இரண்டு கேள்விகள் folks :

கேள்வி # 1 : தொடரும் ஆண்டுகளில் இந்த Father's Day போல வேறு ஏதாச்சும் முயற்சிக்கலாமா? அழுகாச்சிக் காவியங்களாகத் தான் என்றில்லாது - வித்தியாசமாய் ஏதாச்சும்?

கேள்வி # 2: இந்த "அப்புச்சி டே'; "அத்தாச்சி டே' போன்றவையெல்லாம் சற்றே மேற்கின் காப்பிகளாகத் தெரிந்திடும் பட்சத்தில் நமக்கு ஒத்துப் போவது போல் எதையேனும் 2026-க்கு முயற்சிக்கலாமா?

"சுப்ரமணியபுரம்!' படம் வந்து இருபது வருஷங்கள் ஆச்சு... 10 years of பாகுபலி­.. என்று பார்ட்டி கொண்டாடுவதைப் போல anything for 2026??

Back to the present- இதோ லக்கி லூக்கின் இரண்டு கலர் ஆல்பங்களி­லிருந்துமே தலா ஒரு பக்கப் பிரிவ்யூ! இரண்டிலுமே cast கிட்டத்தட்ட ஒன்றே எனும் போது - திரும்பிய திக்கெல்லாம் டால்டன்களும், ரின்டின் கேனும் தான் வலம் வந்தது போலிருக்கவுள்ளது!

ஜுலையின் அடுத்த கலர் ஆல்பத்தில் போட்டுத் தாக்கக் காத்திருப்பது நமது லோன் ஸ்டார்! 2022-ல் அறிமுகம் கண்ட சமகால மும்மூர்த்திகளி­லிருந்து எஞ்சியிருக்கும் ஒரே மனுஷரான "டேங்கோ' ஒரு all out ஆக்ஷன் த்ரில்லரில் தெறிக்க விடுகிறார்! But இந்த முறை ஒரு சின்ன வித்தியாசம்! மாமூலாய் நீலக்கடல்களின் ரம்யமும், புதுப்புது தேசங்களும் கண்முன்னே விரிவதுண்டு டேங்கோ சாகஸங்களில்! இம்முறை கதை நகர்வது ஆர்ஜென்டினியத் தலைநகரில் மட்டுமே! And கடல், கப்பல், படகு என்றெல்லாம் இல்லாது எல்லாமே நிகழ்வது நிலத்தில்! "வேட்டை மறக்கா வல்லூறுகள்!'' சித்திரங்களில் எப்போதும் போல பட்டாசாய் அனல் பறக்கச் செய்கிறதெனில் அந்த டிஜிட்டல் கலரிங் முற்றிலுமாய் வேறொரு லெவலுக்கு இட்டுச் செல்கிறது! இது 2020-ல் தான் உருவானதென்பதால் இன்றைய தொழில்நுட்பங்களின் ஜாலம் வசீகரிக்கிறது! கதை - வசனம் டைரக்ஷன் என்பனவெல்லாம் இரண்டாம் பட்சமே இங்கே ; is an absolute visual delight! பாருங்களேன்- ஒரிஜினல் அட்டைப்படத்தையும், உட்பக்க ப்ரிவியூவையும்!


And ஜுலையில் இன்னொரு highlight நம்ம ''இளவரசியார் பெசல்'' தான் என்பதை மறுக்கவோ, மறக்கவோ, மறுத­லிக்கவோ, முறைக்கவோ, வாய்ப்பே லேது என்பேன்- simply becos இம்முறை அமைந்துள்ள இரண்டு (புது) சாகஸங்களுமே தெறி ரகம்! Oh yes - நம்ம அம்மணியை வழக்கம் போல டாக்டர்களும், இம்முறை ஒரு மாற்றத்துக்கு புரபஸர்களும் உசிரை வாங்குவது தொடரவே செய்கிறது தான்! And சில பல காதுகளில் புகை வந்தாலும், சில குய்யாக்கோ - முய்யாக்களும் அரங்கேறிடாது இல்லை தான்! ஆனால், அவர்களையெல்லாம் ஓரமாய்ப் போய் பீடா போடச் சொல்­விட்டு கார்வினும், மாடஸ்டியுமாய் நடந்திடும் அதிரடிகள் அதிர்வேட்டு ரகம்!

ஹனிகன்

மரணப் பொறி!

மேற்படி இரண்டு சாகஸங்களுமே மாடஸ்டியின் "நெட்வொர்க்' நாட்களோடு தொடர்பு கொண்டவை! ஹனிகன் உருவானதோ 1996-ல்.. மரணப் பொறி - much before in 1977...! இரண்டிற்குமே ஓவியர் ரொமரோ தான் என்பதால் அந்தச் சித்திர லாவகம் அற்புதமாய் மிளிர்வதை இரண்டு சாகஸங்களிலுமே பார்த்திடலாம்! 

And இங்கே நமது மொழிபெயர்ப்பு டீமிற்கு ஒன்றரையாண்டுகளாய் வலு சேர்த்து வரும் Ms.சுகன்யாவுக்கு ஒரு shout-out! இரு கதைகளுக்குமே அவர் தான் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்! And yes - நம்ம புடைப்பான மூக்கு, எங்குமே பட்டி டிங்கரிங் பார்க்காது அமைதியாக இராதென்பதால் - இரண்டு ஆல்பங்களிலும் நிறையவே திருத்தங்கள்/ மாற்றங்கள் போட்டுள்ளேன் தான்! ஆனால், மாடஸ்டி கதைகளைக் கையாள்வதென்பது சுலபமே அல்ல ; and to her credit ரொம்பவே டீசென்டாக அவரது எழுத்துக்கள் இருந்ததால் - அதன் மேலே புல்டோசரை விட்டு ஏற்றிச் செப்பனிட அவசியமெல்லாம் எழவில்லை! ஜல்லி­ அடிச்சு, தார் ஊற்றி அவர் போட்டிருந்த அடித்தளத்தில், மேலாக்கா சிமெண்ட் பால் ஊற்றி இப்படியும், அப்படியுமாய் டோஸரை ஓட்டி, சாலையை நம்ம முன்மண்டையைப் போல வழுவழுப்பாய் ஆக்கும் பொறுப்பு மட்டும் நம்மள் வசம்!


And இந்த MAXI சைஸிலான இதழின் ஆகச் சிறந்த பஞ்சாயத்து - அட்டைப்படத்தில் மஞ்ச சொக்காயோடு மாடஸ்டி தந்த போஸ் தான்! பொதுவாய் மஞ்சள் சொக்காய்களை நம்ம ஆம்பளைப் பசங்க ஹீரோக்கள் போடும் போதெல்லாம் துளி கூட சிக்கல்கள் எழுந்ததில்லை! ஆனால், முதல் தபாவா மாடஸ்டியை ஒரு மஞ்சக்காட்டு மைனாவாய் சித்தரிக்க நினைத்த போது, ரொம்பவே எதிர்ப்பலைகள்! In fact நமது வாட்சப் கம்யூனிட்டியில் நடத்திய வோட்டெடுப்பில் செம tough fight!பொதுவாகவே இந்த வாக்கெடுப்புகளில் ஏதேனும் ஒரு தரப்பு மளமளவென வாக்குகளை வாரி landslide வெற்றி பெற்றுவிட்டால் என் பிழைப்பு செம சுலபமாகிப் போகும்! அதே போல மூன்றோ, நான்கோ, ஐந்தோ options இருந்து - இங்கே கொஞ்சம்; அங்கே கொஞ்சமென வாக்குகள் சிதறியிருந்தாலும் கூட மெஜாரிட்டி பக்கமாய் மண்டையை ஆட்டுவதுமே ஈஸி! ஆனால், இரண்டே தரப்புகள் and அதனில் இழுபறி என்றாலே நமக்கு "பிக்னிக் ஸ்பாட்"("அந்த'' சந்தின் புது நாமகரணம்) ரெடியாகி வருகிறது என்று அர்த்தம்! வேணும் என்போர் 95 - வேணாம் என்போர் 65 என்று அமைந்தாலுமே, டபுள் குட்டு வைக்க ஹாஸ்டல் முழுக்க லைனாக ரெடியாகிவிட்டதென்று எடுத்துக் கொள்ளலாம்!

ஆகையால், மண்டையைக் காத்துக் கொள்ளும் ஆர்வத்தில் இம்முறை தடுப்பாட்டம் ஆடியுள்ளோம்! இதோ- பொறுப்பாய் கத்தியோடு - 'கரீஸ்' கலரில் நிற்கும் கார்வினே ரெகுலர் அட்டைப்படம்! So புத்தக விழாக்களுக்கும், புத்தகக் கடைகளுக்கும் "க்ரீஸ்' கார்வினே ஆஜராவார்! 

அதே சமயம் மஞ்சள் மாடஸ்டியிடம் மனதைப் பறிகொடுத்த இல்லத்துப் பூரிக்கட்டைகளுக்குப் பயமற்ற வாலிபர்களுக்கென "மஞ்சள் மைனா மாடஸ்டி'' variant கவராக- பிரத்தியேகமாய் அமைந்திடுவார்!  

So "பூரிக்கட்டைக்குப் பயமில்லை" (Poori kattaiku Payamillai) என்பதைக் குறிக்கும் விதமாய் ''Po.Pa'' என்று மெஸேஜ் அனுப்பும் வீரர்களுக்கு யெல்லோ மாடஸ்டி! தேர்வு செய்திடும் இந்த option இரண்டே நாட்களுக்கே folks- டெஸ்பாட்ச் செவ்வாயன்று என்பதால்!

So Ka.Ga-வா ? Po.Pa-வா?என்பதை அர்ஜெண்டாக நமது கம்யூனிட்டி வாட்சப் நம்பருக்கு மட்டுமே அனுப்பிடக் கோருகிறேன்!

வாட்சப் நம்பர்:96000 61755

இந்த நம்பர் தவிர்த்த வேறு எந்த நம்பருக்கும் அனுப்பிட வேணாம்- ப்ளீஸ்!

And ரொம்ப முக்கியமான தகவலுமே மக்களே: "நேக்கு கரீஸ் கார்வின் வாணாம் - கறுப்பு ஒத்துக்காது..! அப்புறமா மஞ்சள் மைனாவும் வாஸ்துக்கு ஆவாது! அதனாலே உள்பக்கமா நாலு ஸ்பூன் நெய்விட்டு, வெளிப்பக்கமா மூணு ஸ்பூன் ஆயில் விட்டு, மழைச்சாரலாட்டம் லைட் ப்ளூ கலரிலே, இளவரசி சாரட் வண்டிலே வர்றா மெரி 3D-லே ஒரு அட்டைப்படம் போட்டு வேணும்! புக்கை டப்பியிலேர்ந்து பிரிக்கிறப்போவே "ராஜாவின் பார்வை... ராங்கியின் பக்கம்'னு பாட்டும் கேட்கணும்!'' என்ற ரீதியிலான special requests வாணாமே ப்ளீஸ்! நம்மாட்கள் பாவம்- நான் அடிக்கடி செய்யும் குரங்கு பல்டிகளிலேயே முக்கால் நாக்கு தொங்கி விடுகிறது அவர்களுக்கு! இதில் நீங்களுமே 'ஆட்றா ராமா - தாண்ட்றா ராமா' என்று குச்சிகளைக் கையிலெடுத்தால் அத்தினி பேரும் ஜார்கண்ட் பக்கமாய் ஓட்டமெடுத்து விடுவார்கள்! So சிம்பிளாய் இதை வைத்துக் கொள்வோமே!!

1.No message எனில் கரீஸ் கார்வின் ராப்பர்!

2.Po.Pa என்றால் மஞ்சள் மாடஸ்டி!

3. இந்த வாய்ப்பு முன்பதிவு செய்துள்ள Electric'80s சந்தா நண்பர்களுக்கு மட்டுமே!

4.நீங்கள் ஆன்லைனில் மட்டுமே அவ்வப்போது வாங்குவோராக இருப்பின் அங்கே 50 புக்ஸ் மட்டுமே மஞ்சள் மாடஸ்டியோடு சாத்தியமாகிடும்! அதன் பின்பாய் சகலமுமே கரிஸ் தான்!

தயை கூர்ந்து இதை விவாதிக்க நம்மாட்களுடன் திங்களன்று டெ­லிபோன் யுத்தங்களைத் தொடுக்காதீர்கள் மக்களே! இந்த மந்தி வேலைகள் முழுக்க முழுக்க நம்ம கைவண்ணமே! So அவர்களிடம் இதன் சாதக - பாதகங்களை விளக்கும் முயற்சியில் வீணாய் "தம்'' கட்ட வேணாமே ப்ளீஸ்! அதற்கென நம்ம 'பிக்னிக் ஸ்பாட்டில் ' காத்திருப்பேன் என்பதால் அக்கட வைத்துக் கொள்வோமே - பஞ்சாயத்துக்களை !!

Bye all.. டின்டின் கடைசிப் பத்து பக்கங்கள் அழைப்பதால் கிளம்புகின்றேன்! Have a great weekend! See you around!

Saturday, June 21, 2025

ஜூலைக்கொரு வாடகை சைக்கிள் !

 நண்பர்களே,

வணக்கம்! பூமியின் ஒரு ஸ்பெஷல் தினத்துக்கு நல்வரவு! வருஷத்தின் ஜுன் 21-ம் தேதி தான் பூமியின் மேல்பாதியானது சூரியனை நோக்கிச் சாய்ந்து கிடக்குமாம் - ஆக நீண்டதொரு பகல் பொழுதையும், மிகச் சுருக்கமானதொரு இரவுப் பொழுதையும் உருவாக்கிட! வடதுருவ நகர்களிலெல்லாம் இந்த Summer Solstice தினத்தை செம விமர்சையாகக் கொண்டாடுவதை நானே பார்த்திருக்கிறேன்! So கிட்டத்தட்ட ஆண்டின் நடுப்பகுதி என்ற பொழுதில் இன்று நின்று கொண்டிருக்கிறோம்!

And காத்திருப்பது "ஆண்டுமலர் மாதம்" என்பதால் இந்த நொடியில் வாடகைச் சைக்கிளைத் தேடும் ஆட்டோகிராப் சேரனைப் போல மனசு flashback-க்குள் ஐக்கியமாகிட விழைகிறது! அது என்னமோ தெரியலை- அப்பப்போ பரோட்டாக்களை உள்ளே தள்ளினாலுமே சாலையோரக் கடைகளின் மாஸ்டர்கள் மலை போல மைதாவைக் குவித்துக் கொண்டு, ஈரானிய ஏவுகணைகளின் லாவகத்தோடு முட்டைகளை உடைச்சு அதனுள்ளே ஊற்றிவிட்டுப் பினைந்து தள்ளுவதைப் பார்க்கும் போதெல்லாம் பசிக்கிறது தானே?! அதே போலவே ஒரு நூறு தபா பழங்கதைகளை அசை போட்டிருந்தாலுமே நாற்பத்தியொரு ஆண்டுகளுக்கு முன்பான அந்த நாட்களை நினைத்துப் பார்க்கும் போதெல்லாம் மண்டை நிறைய கேசமும்; அகம் அம்புட்டும் ரம்யமும் இருப்பது போலவே ஒரு பீலிங்! And செம தற்செயலாய் நாற்பத்தியொரு ஆண்டுகளுக்கு முன் போலவே இப்போதும் இளவரசியுடன் பணியில் ஈடுபட்டிருக்க, nostalgia ஒரு மிடறு தூக்கலாய் அலையடிக்கிறது! "The பிளைஸி ஸ்பெஷல்'' இதழுக்கான எடிட்டிங் ஓடிக் கொண்டுள்ளதே!

1983......!! லக்கி லூக்குக்கு இணையாக "தனிமையே என் துணைவன்' என்று பாட்டுப் படிக்கும் நிலை தான் அன்று எனக்குமே! பதினான்கு வருடப் பள்ளி வாழ்க்கை முற்றுப் பெற்ற தருணத்தில், அடுத்து என்ன செய்வதென்ற வழிகாட்டலுக்கு நமக்கு விதி லேது! அப்பாவால் அன்றாடப் பாடுகளையே அல்லலி­ன்றிச் சமாளிக்க முடியாத நாட்கள் அவை! And எனது தாய்வழிப் பாட்டியும் மிகுந்த ஆரோக்கியக் குறைபாடுகளோடு முட்டி மோதிக் கொண்டிருக்க- தாத்தாவால் எனக்கோசரம் எதுவும் செய்ய இயலா நிலை! மார்ச் இறுதியில் தேர்வுகள் ஓவர்- நானோ CBSE பள்ளி மாணவன் என்பதால் எங்களது ரிசல்ட்கள் டில்­லியி­ருந்து மே நடுவாக்கில் வெளியிடப்படும்! And மேயும் வந்து, ரிசல்ட்களும் வந்து, எங்களது Commerce பிரிவில் நான் டாப்பராகத் தேர்வானதும் நிகழ்ந்த வேத்திலேயே மறந்தும் போயின - becos ரொம்ப ரொம்பச் சீக்கிரமே எனக்குப் புரிந்துவிட்டது காலேஜ் பக்கமாய் தலை வைக்கும் வாய்ப்பு கூட நமக்கு வாய்க்கப் போவதில்லையென்று! அது நாள் வரைக்கும் நெதத்துக்கும் வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் இருந்தது - பள்ளி, கல்வி என்றெல்லாம்! ஆனால், திடுதிடுப்பென ஒவ்வொரு நாளுமே கேள்வி குறியாகியிருந்தது!

உடன் படித்த பசங்கள், பெண்கள் சகலரும் சென்னை, கோவை என ஆங்காங்கே கல்லூரிகளில் சேர்ந்திருக்க, அவர்களிருக்கும் திக்கைத் தவிர்ப்பதே எனது முதல் இலட்சியமாகிப் போச்சு! கடன் தொல்லைகள், கழுத்தைச் சுற்றிய பாம்பாய் படுத்தியெடுக்க, சீனியர் எடிட்டர் காலையில் வீட்டிலிருந்து கிளம்பிப் போய் விடுவார் ; so அலறும் தொலைபேசி அழைப்புகளை ஏற்கும் பொறுப்பு நம்மளதே! அன்றெல்லாம் விடியற்காலைகளில் கந்தர் சஷ்டியோ, சுப்ரபாதமோ ஒ­லித்திடாது ; மாறாக, மார்வாடி மாமையாக்களிடமிருந்தும், செட்டியார் சேட்டன்களிடமிருந்தும் குளிரக் குளிர கிட்டிடும் அர்ச்சனைகளே காதை நிரப்பிடும்! அக்காக்கள் இருவருமே திருமணமாகிப் போயிருந்தனர் & தம்பி + தங்கை ஸ்கூல் போகும் பிள்ளைகள்! So காலைப் பொழுதுகளை காது நிறைய கரம் மசாலாக்களால் நிரப்பிய பிற்பாடு, குளித்துக் கிளம்பிப் போக போக்கிடம் கிடையாது! அப்பாவின் ஆபீஸுக்குப் போனால், கடனுக்கு ஈடாக ஏதேனும் மிஷின்களை ஈட்டிக்காரப் பிரபுக்கள் ஜப்தி பண்ணி தூக்கிச் செல்லும் காட்சிகளே வரவேற்கும் என்பதால் அங்கே போகவே மனம் ஒப்பாது! தவிர, முத்து காமிக்ஸ் ஆபீஸில் நான் அமர்ந்திருக்கும் மேஜையில் அப்போது திருவாளர் முல்லை தங்கராசன் நடுநாயகமாய் குந்தியிருப்பார்! முத்து காமிக்ஸ் வாரமலருக்கு ஏற்கனவே மங்களம் பாடப்பட்டிருந்த நிலையில், அடுத்து க்ரைம் நாவல்களை வாரயிதழாக வெளியிடலாமென்று அப்பாவிடம் கொக்கி போட்டுக் கொண்டிருப்பார்! So ஆபீஸ் பக்கமாய் போவதை ரொம்பவே குறைத்துக் கொண்டேன்!

என்ன செய்வதென்றே தெரியாத அந்த நாட்களில் நான் செய்த குடாக்குத்தனங்களை இன்று நினைத்தால் சிரிக்கத் தான் தோன்றுகிறது! Hindu நியூஸ்பேப்பரின் வரி விளம்பரங்களை நெதமும் விடாமல் படிப்பேன்; ஏதாச்சும் டிப்ளமோ படிப்புகளோ; வூட்டிலி­ருந்தபடியே செய்யக்கூடிய வேலைளோ கண்ணில் படுகின்றனவா? என்ற தேடலில் ! "சேலம் டாக்டர் ஈரோடு விஜயம்'' போன்ற பூமியை அதிரச் செய்யும் விளம்பரங்களையெல்லாம் தாண்டி கண்ணில்பட்டது ஒரு ad! அது தான் "வீட்டி­லிருந்தபடியே டிடெக்டிவாக ஆவது எப்படி?'' என்றதொரு டிப்ளமோ படிப்பு(?!!!!) ......அரை லூசாட்டம் அதற்கொரு தபால் போட்டேன் - என்ன தான் சொல்றானுங்கன்னு பார்ப்போமே என்ற நினைப்பில்! தபால் போட்டாச்சு - ஆனால், அவர்கள் அனுப்பக் கூடிய பதிலை வீட்டில் யாராச்சும் பார்த்துவிட்டால் சிரிப்பாய் சிரித்து விடுவார்களே என்ற பயம் தொற்றிக் கொண்டது! "ஆஹா.. என்னடா இது முத்து விஜய ரிப் கிர்பிக்கு வந்த சோதனை?" என்றபடியே தினமும் போஸ்ட்மேன் வீட்டுப் பக்கமாய் வரக் கூடிய நேரத்துக்கு ரோட்டிலேயே போய் நிற்க ஆரம்பித்தேன்!

"நாலு நாளாய் நடுரோட்டில் பிள்ளை திடீரென தேவுடா காக்குதே?'' என்று அம்மாவுக்கு சந்தேகம் எழுந்திடக் கூடாதே என்ற பயமும் இன்னொரு பக்கம்! ஐந்து நாட்கள் கழித்து ஒரு பதினைந்து காசு போஸ்ட்கார்ட் வந்தது - ரப்பர் ஸ்டாம்பில் "என்னவோ ஒரு டிடெக்டிவ் இன்ஸ்டிட்யூட்'' என்ற விலாசத்தோடு! சேலம் பக்கமாய் ராசிபுரமோ, ஆத்தூரோ அவர்களது கம்பெனி(!!!) என்று பார்த்தேன்! "ஆறு மாசம் படிச்சுப் போட்டா அடுத்து சேம்சு பாண்ட் நீங்களே தான்'' என்ற ரேஞ்சுக்கு என்னவோ எழுதியிருந்தார்கள்! "அஞ்சல்வழியில் படிக்கிற சமாச்சாரங்களை அனுப்பி வைப்போம்; நீங்க இப்போ ஒரு 150/- அனுப்பி வைக்க வேண்டியது!'' என்றும் இருந்தது! நாற்பத்தி இரண்டு வருஷங்களுக்கு முன்னே அதெல்லாம் வெயிட்டானதொரு தொகை! என் கையிலோ வெறும் அரையணா கூடக் கிடையாது! இத்தனை பணத்துக்கு எங்கே போவதென்று புரியலை!

என்னைப் போலவே வேலையற்ற எவனோ ஒருத்தன் ராசிபுரத்திலி­ருந்தபடியே காதிலே பூச்சுற்றி நாலு காசு சம்பாதிக்கப் பார்க்கிறான் என்பது கூட மண்டைக்குள் அந்த நாட்களில் எட்டவில்லை! தாத்தாவிடம் ஏதேதோ சொல்லி இரண்டோ- மூன்றோ தவணைகளில் அந்த ரூ.150-ஐ கேட்டு வாங்கவே கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் பிடித்தன! மொத்தமாய் காசு சேர்ந்த பின்னே அதை மணியார்டர் பண்ண போஸ்ட் ஆபீஸிற்குப் போனால், படிவத்தைப் பூர்த்தி செய்யக் கூடத் தெரியலை நமக்கு! பள்ளிக்கூடத்தில் பெரிய பருப்பு- but ஒரு சாதாரண படிவத்தை நிரப்பவே தடுமாறும் நிலையாகிப் போச்சே என்று துப்பிக் கொண்டே யாரிடமோ கேட்டு, ஒரு மாதிரி பாரத்தை பூர்த்தி செய்து பணத்தை கவுண்ட்டரில் நீட்டினேன்! அங்கே அமர்ந்திருந்த மனுஷன்- "மணியார்டர் கமிஷன் இவ்ளோ.. அதையும் சேர்த்து எடுத்து வை தம்பி!'' என்றார்! ஆஹா.. இதுக்குமொரு கட்டணம் உண்டா? என்று பேந்தப் பேந்த முழித்தபடியே ஆபீஸிற்கு ஓட்டமெடுத்தேன் - அந்த ரெண்டோ, மூணோ ரூபாய்களை வாங்கி வர! ஒருவழியாய் மணியார்டரை அனுப்பிவிட்டு வீட்டுக்குத் திரும்பிய போது, என் மனக்கண்ணில் ஜானி நீரோ... காரிகன்.. ரிப் கிர்பி என்று ஓடிக் கொண்டிருந்தனர்! கூடிய சீக்கிரமே நாமளும் அந்த ரேஞ்சுக்கு டிடெக்டிவாகி இருப்போமென்று மெய்யாலுமே நம்பியிருந்தேன்! மறுநாள் முதல் உச்சிப் பொழுதில் போஸ்ட்மேனுக்காக ரோட்டில் காத்திருக்கும் படலம் தொடர்ந்தது!

நாட்கள் சிறுகச் சிறுக நகர்ந்தன.. மணியார்டரைப் பெற்றுக் கொண்டதற்கான ரசீதென்று ஒரு சிறு அட்டைத் துணுக்கை மட்டுமே போஸ்ட்மேன் தந்தார்! தொடர்ந்த நாட்களில் பகல்களும் புலர்ந்தன; போஸ்ட்மேனும் வருவார் but "ஒண்ணுமில்லே'' என்று சைகை காட்டியபடியே போயும் விடுவார்! விடாப்பிடியாய் இரண்டு வாரங்கள் எல்லைவீரனாய் ரோட்டில் நின்றதன் பின்னே தான் சிறுகச் சிறுக உரைக்க ஆரம்பித்தது - எல்லாமே ஒரு டகால்டி என்பது! காசும் போச்சு; ஒரு மாதத்துக் கனவுகளும் போயிண்டே.. என்பது புரிபட்ட நேரத்தில் தொண்டையெல்லாம் அடைத்தது; ஆனால், கஷ்டத்தைச் சொல்லி­ அழக் கூட ஆள் கிடையாது ! வெறுத்துப் போயிருந்த அந்தப் பொழுதில் தான் ஒரு நல்ல மனிதரின் பரிச்சயம் கிட்டியது!

அந்நாட்களில் மாலை மலர் குழுமத்தி­லிருந்து "தேவி' என்ற வாரயிதழ் ஒன்றினை வெளியிட்டு வருவார்கள்! அதற்கான அட்டைப்படம் மட்டும் அப்பாவின் அச்சகத்தில் ப்ரிண்ட் ஆகும். திரு.ஆதித்தனார் அவர்களின் மூத்த புதல்வரான திரு.ராமசந்திர ஆதித்தன் அவர்கள் அதனை நடத்திக் கொண்டிருந்தார்! அப்பா மீது அவருக்கு நிரம்ப அன்பும், நம்பிக்கையும் உண்டு! படு சுமாராக "தேவி' அட்டைப்படங்களை அச்சிட்டு அனுப்பினாலும், முகம் சுளிக்க மாட்டார்கள்! அவரது மூத்த மகன் திரு.கண்ணன் ஆதித்தன்! அமெரிக்காவில் கல்வி கற்று முடித்து சென்னைக்குத் திரும்பியிருந்தார்! அச்சுத்துறை சார்ந்த அனுபவம் அவருக்குக் கிட்டினால், நல்லதென்று அவரது தந்தையார் கருதிட, அன்றைக்கு அச்சுத் தொழிலுக்கு மையமாய் திகழ்ந்த சிவகாசியில் சில நாட்களைச் செலவிட்டால் பயனுள்ளதாக இருக்குமென்று எண்ணியிருந்தார்! "சிவகாசி" என்ற உடனே அந்நாட்களில் அவர்களுக்கு இருந்த பிரதான பரிச்சயம் நம்ம சீனியர் எடிட்டரும், அவரது அச்சகமும் தான்! So திரு.கண்ணன் ஆதித்தன் அவர்கள் சிவகாசிக்கு ஒரு வாரமோ என்னவோ visit அடித்தார்!

அறவே வேலையே இல்லாத அரைவேக்காடு நான் இருந்ததால், கண்ணன் ஆதித்தன் அவர்களைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்து விட்டார் சீனியர் எடிட்டர்! அன்றைக்கு சிவகாசியில் ஒரேயொரு மிதமான லாட்ஜ் மட்டுமே உண்டு; ஆனால், அதுவும் பெரிய ஸ்டார் ஹோட்டல் ரகமெல்லாம் கிடையாது! வருகிறவரோ பாரம்பரியமிக்கப் பெரிய குடும்பத்தவர் ; அமெரிக்காவில் கல்வி கற்றிருந்தவர்! So இந்தப் புறாக்கூண்டில் எவ்விதம் தாக்குப் பிடிப்பாரோ? என்ற பயம் எனக்கு! தவிர, இந்த ஊரில் தெருவுக்குத் தெரு இருக்கும் பாய் கடை பரோட்டாக்கள் தான் அன்றைய McDonald's.....Burger King...KFC...! புதுசாய் வருபவர்கள் மெய்யாலுமே திணறித் தான் போவார்கள்! ஆனால், மலர்ந்த முகத்தோடு வந்து சேர்ந்த கண்ணன் அவர்கள் எதையுமே ஒரு குறையாகப் பார்க்கக் காணோம்! சைக்கிள் ரிக்ஷாவில் ஏறி உடுப்பி ஹோட்டலுக்கு என்னோடு போய், விளக்குமாற்றால் வருடப்பட்ட கற்கள் மீது சுடப்பட்ட தோசைகளையும் சங்கடங்களின்றிச் சாப்பிட்டார்; சந்துக்குள் இருந்த நமது ஆபீஸிற்கும் சங்கோஜங்களின்றி நடந்தே வந்தார்! பிராசஸிங் நுணுக்கங்கள்; அச்சுத்துறை டெக்னிக்ஸ் என்று கவனமாய் பார்வையிட்டார்!

ஓய்வாய் ஹோட்டல் ரூமில் இருக்கும் போது தான் என்னிடம் பேச்சுக் கொடுத்தார்- "நீ என்ன பண்ணிக்கிட்டிருக்க ப்ரோ?'' என்று!! அந்நாட்களில் நம்பளுக்கு புடிக்காத ஒரே வினா அது தான்......ஆனால், ஓடவோ, ஒளியவோ இடமிருக்கவில்லை - அவர் உள்ளன்போடு அந்தக் கேள்வியினை முன்வைத்த போது! எனக்கோ, எதையாச்சும் புலம்பி, ஒப்பாரி வைத்துத் தொலைத்தால் அப்பாவின் பெயர் கெட்டு விடுமே என்ற பயம்! So எதையோ சொல்லி­, பூசி மெழுகிட நான் எத்தனித்தாலுமே அவருக்கு நிலவரம் புரிந்தது! ஆறுதலாய் பேசினார்...! "உனக்கு எதில் ஆர்வமுள்ளதோ- அதனில் முயற்சி செய்....சென்னை வந்தால் ஏதும் உதவி தேவை எனில் சொல்லு !" என்று சொன்னார்! ஏனோ தெரியலை - அன்று இரவு அழுதேன்.. ரா முழுக்க அழுதேன்! எதற்குமே பிரயோஜனமாகிட மாட்டோமோ? என்று கொஞ்ச காலமாகவே அரிக்கத் துவங்கியிருந்த அரக்கன் அழுது முடித்த போது லேசாக ஓய்ந்தது போலி­ருந்தது காலையில் எழுந்த போது!

ஆனால், நம்ம கி.நாக்களுக்கு அன்றைக்கே ட்ரெய்லர் விட்டிருந்தார் புனித மனிடோ! அழுகாச்சிப் படலம் அத்தனை சுலபமாய் ஓய்ந்திருக்கவில்லை! சுகர்; ஆஸ்துமா; இருதயக் கோளாறு என்று அல்லல்பட்டுக் கொண்டிருந்த எனது பாட்டி ஒரு டிசம்பர் நாளில் just like that ஒற்றை நிமிடத்தில் இயற்கையோடு ஐக்கியமாகியிருந்தார்! மூன்று நாட்களுக்கு முன்னே மதுரைக்குக் கிளம்பிக் கொண்டிருந்த தாத்தாவையும், பாட்டியையும் நான்தான் வழியனுப்பி வைத்திருந்தேன்! பாட்டியை அதன் பின்பாக நான் பார்த்தது சடலமாகக் கொண்டு வரப்பட்ட போது தான்! ஒற்றை நாளில் உலகமே சரிந்தது போ­லிருந்தது! பதினாறு வயதில் நான் பார்த்த முதல் family member-ன் மரணம் அது - உலுக்கித் தள்ளிவிட்டது! பாட்டிக்கு அப்போது வயது 55 தான் எனும் போது இழப்பை ஜீரணிக்க கிஞ்சித்தும் முடியவில்லை! வீட்டின் முதல் பேரன் என்ற வகையில் சின்ன வயதில் பாட்டியை ரொம்பவே பெண்ட் கழற்றியிருந்ததெல்லாம் மனதில் நிழலாட, ஒவ்வொரு ராத்திரியும் மொட்டை மாடியில் தனியாய் போய் அமர்ந்து அழுவேன்! ஆனால், எல்லா இருண்ட குகைகளின் இறுதியிலும் ஒரு வெளிச்சக் கீற்று இல்லாது போகாது என்பது நிஜம் தான் போலும்! பாட்டியின் மறைவைத் தொடர்ந்து தாத்தா தனித்து இருக்காது, எங்களோடே குடியிருக்க வந்துவிட்டார்கள்! அம்மா தான் அவருக்கு ஒரே பிள்ளை என்பதால் அந்தக் குடிமாற்றம் சுலபமாகிப் போனது!

ஆறு மாதங்களாய் என்னை வதைத்துக் கொண்டிருந்த தனிமை சிறுகச் சிறுகக் கரைந்தோடத் துவங்கியது தன் பிற்பாடே! தாத்தாவுமே ஒரு அச்சகம் நடத்தி வந்தவர் என்பதால் சென்னை ட்ரிப்ளிகேனில் உள்ளதொரு பாரம்பரியமிக்க சீட்டுக் கம்பெனிக்கு வருஷா வருஷம் சாமி படம் போட்ட காலெண்டர்கள் ப்ரிண்ட் செய்து தருவார்! 1983 டிசம்பரிலோ பாட்டியின் காரியங்கள் முடிந்திருந்த நிலையில் தாத்தாவால் காலெண்டர் தயாரிப்பினைக் கண்காணிக்க இயலவில்லை! "நீ பார்த்துக்குறியாடா கண்ணா?'' என்று தாத்தா கேட்ட போது - இஸ்ரேல் - ஈரான் யுத்தத்துக்கு மத்தியஸ்தம் பண்ணும் பொறுப்பையே என்னிடம் ஒப்படைத்தது போலிருந்தது! அன்று வரைக்கும் கண்ணாடியில் பிரதிப­த்த ஒரு தண்டச் சோற்றுத் தடியன் திடுதிடுப்பென காணாது போய்விட்டது போல் பட்டது!

ஒரு விநாயகர் படம்! 30.000 காலண்டர்கள்! அச்சிட்டு அவர்களது ஐந்து கிளைகளுக்கு (டில்­லி, மும்பை, சென்னை; பெங்களூர்; கல்கத்தா ) அனுப்பிட வேண்டும்! தாத்தாவின் பிரஸ் மூடியிருந்தது என்பதால் அப்பாவின் மூத்த சகோதரரிடம் பிரிண்ட் பண்ணி வாங்குவது என்று தீர்மானித்தேன்! (பின்நாட்களில் லயன் காமிக்ஸ் துவக்கம் கண்ட பிற்பாடு நாமாக அச்சு இயந்திரங்கள் வாங்கும் வரைக்கும் பெரியப்பாவின் பிரஸில் தான் பிரிண்ட் செய்வோம்)

சித்திரம் போடுவது பாலக்காட்டில் உள்ளதொரு ஓவியர்! முழுப் பொறுப்பு மட்டுமல்லாது, தயாரிப்பின் முழுக் காசையும் என் வசம் தாத்தா ஒப்படைத்திருக்க, நேற்று வரை வெங்கம் பயலாய் சுற்றிக் கொண்டிருந்தவனிடம் கணிசமாய் பணமும், பொறுப்பும் ஒரே நாளில் தொற்றியிருந்தன! நான் ப்பாவின் பிரஸ்ஸில் ஏகப்பட்ட நாட்களைச் செலவிட்டிருந்தேன் தான்; ஆனால், அச்சுக்கலை என்பதற்குள் புகுந்து பணி செய்த அனுபவமெல்லாம் இம்மியும் கிடையாது! So திடுமென கைக்கு வந்த பொறுப்பு மலைக்கச் செய்தாலும், இதைச் சொதப்பாது செய்து முடிக்க வேண்டுமென்ற வேட்கை ஒரு வெறியாய் உள்ளுக்குள் ஆட்டிப் படைத்தது! பெரியப்பாவும் சரி, அவரது அச்சகத்தினரும் சரி, எனக்கு மெய்யாலுமே இயன்ற அத்தனை உதவிகளையும் செய்தனர்! அவர்களது ஆபீஸிலேயே எனக்கென ஒரு சின்ன மூலையில் ஒரு மேஜை போட்டுத் தந்தனர்!

  • ஒவியர் படம் போட்டாகணும்!
  • அதை கம்பெனியினர் ஓ.கே. செய்தாகணும்!
  • அதன் பின்பாய் அந்த டிசைனை நெகடிவ் எடுக்க வேண்டும்!
  • ஐந்து வர்ணங்களில் அச்சிட பிராசஸிங் பணிகள் அடுத்து!
  • அப்புறமாய் பேப்பர் கொள்முதல்....!
  • பின்னே பிரிண்டிங் !
  • அதன் மேலே வார்னிஷ் + தங்க மூலாம் பூச்சு!
  • அதனூடே கீழே தேதிகள் கொண்ட தாள்களை தனியாக ரெடி பண்ணி, ப்ரிண்ட் பண்ணி வைத்திருக்கணும்!
  • அதுவொரு Chit Fund நிறுவனம் என்பதால் என்றைக்கு ஏல விடுமுறை என்று ஒவ்வொரு கிளைக்கும் ஏற்ப டைப்செட் செய்து, பிழையின்றி சரி பார்த்திருக்க வேண்டும் ! கன்னட ராஜ்யோத்சவ தினத்துக்கு பெங்களூரு காலெண்டர்களில் விடுமுறைகள் காட்டணும் ; துர்கா பூஜாவுக்கு கொல்கத்தா காலெண்டர்களில் ....and etc etc !
  • படத்தைத் தொங்க விடும் பொருட்டு மேல் பக்கம் டின் அடிக்க வேண்டும்!
  • கீழேயுள்ள மாதக்குறிப்புகள் கொண்ட ஷீட்களை வரிசைப்படுத்தி தையல் மிஷின்களில் (யெஸ்- டெய்லர்கள் தைக்கும் அதே தையல் மிஷினில் தைக்க வேண்டும்) தைத்து வாங்கினால் காலெண்டர்கள் ரெடி!
  • அப்புறமாய் கேஸ் பெட்டிகளில் பேக் பண்ணி எந்த ஊருக்கு எவ்வளவென்று கணக்கிட்டு அனுப்ப வேண்டும்!
  • அத்தனை கிளைகளுக்கும் காலெண்டர்கள் பத்திரமாகக் கிடைத்த பின்பாக சென்னை தலைமையகத்தில் காசு வசூ­லிக்க வேண்டும்!

இன்றைக்கு யோசித்தால் மலைப்பாக உள்ளது - நயா பைசா அனுபவமின்றி இத்தனை வேலைகளை நான் எவ்விதம் ஏற்றுக் கொண்டேன் என்பது! ஆனால், அடுத்த பதினைந்து நாட்களுக்காவது புலரும் ஒவ்வொரு காலையிலும் என்னை நானே கண்ணாடியில் பார்க்கும் போது, லஜ்ஜை பிடுங்கித் தின்னாமல் இருக்க எதையும் செய்யலாமென்ற ஒரு desperation தான் என்னை அன்று இயக்கியது என்பது புரிகிறது! பைத்தியக்காரன் போல கால நேர மாற்றங்களை சட்டை செய்யாது பணி செய்வது துவங்கியது அன்றைக்குத் தான்! அப்போதெல்லாம் சிவகாசி ஒரு 24/7 நகரம்! இரு ஷிப்ட்களில் ஊரின் அத்தனை அச்சகங்களும் இயங்கி வரும் என்பதால் ஹோட்டல்கள், டீக்கடைகள் என சகலமும் திறந்திருக்கும்! So வேளைக்குச் சோறு' என்பதெல்லாம் மறந்து "வேலைக்குப் பின் சோறு'' என்று மாறிப் போயின எனது பொழுதுகள்!

எனக்குப் பணிகள் தெரியாதென்ற போதிலும் பணி தெரிந்தோரைத் தெரியும்! So ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொருவரவது ஒத்தாசையைக் கோரிப் பெற்று வரிசையாய் வேலைகள் அரங்கேறுவதை ரசித்தேன் ! நெட்டி வாங்கிய இரண்டரை வாரங்களுக்குப் பின்பாக கேஸ்பெட்டிகளில் காலெண்டர்களை அடைத்து லாரி ஷெட்களுக்கு அனுப்பி விட்டு அந்த லாரி பாஸ்களை பதிவுத் தபால்களில் ஐந்து முகவரிகளுக்கும் அனுப்பி முடித்த போது தேதி 31.12.1983. ஆண்டின் பெரும் பகுதி சூன்யமாய் தென்பட்டிருந்த நிலையில், அதன் இறுதி இருபது நாட்கள் எனக்குள் ஒரு பெரும் நம்பிக்கையினை விதைத்திருந்தன! வேலைகளை முடித்த கையோடு, கணக்கு வழக்குகளையும் எழுதி தாத்தாவிடம் பாக்கிப் பணத்தைக் கொடுத்த போது, பாம்பன் பாலத்தையே கட்டி முடித்த திருப்தி எனக்குள்! And அந்த இரண்டு வாரத்து அனுபவங்களே ஆறு மாதங்களுக்குப் பின்பாய் லயன் காமிக்ஸின் பயணம் துவங்கிய பிற்பாடு எனக்குப் பெரிதும் உதவின என்பதில் துளியும் ஐயமில்லை!

தொடர்ந்த நாட்களில் தாத்தாவுக்கு நானும், எனக்கு தாத்தாவும் துணையென்று ஆகிப் போனோம்! ஒரே ரூமில் தாத்தாவும், நானும் படுத்துறங்க, சீக்கிரமா ஒரு ரவுண்ட் தூக்கத்தைப் போட்டுவிட்டு நள்ளிரவுவாக்கில் தாத்தா முழிப்பதற்கும், நம்ம ராக்கோழி அவதார் அரங்கேறிடுவதற்கும் சரியாகயிருக்கும்! ஏதேதோ பேசுவோம்...விடிய விடியப் பேசுவோம் ! முறையாய் ஆதரவு தந்து தூக்கிவிட்டால் பேரன் தேறிவிடுவான் என்ற நம்பிக்கை தாத்தாவுக்குப் புலர்ந்ததோ என்னவோ- எனது கனவான டிங்-டாங் சிறுவர் மாத இதழை நனவாக்கும் முயற்சியில் ஈடுபட ஊக்குவித்தார்! மதுரை காமராஜ் யுனிவர்சிடியின் அஞ்சல்வழிக் கல்வியில் ஏற்கனவே சேர்த்தும் விட்டிருந்தார் !! So மெதுமெதுவாய் எனக்குமொரு புது routine புலரத் தொடங்கியது!

எழுதினேன்.. எழுதினேன்.. கட்டுரைகள்; துணுக்குகள்; கதைகள் - என்று ஏதேதோ எழுத ஆரம்பித்தேன்! ஒவ்வொன்றுமே வெகு சீக்கிரம் வெளிவரப் போகும் இதழினில் பக்கங்களாகிடப் போகின்றன என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு நாளையுமே எழுதிடும் marathon-களாக்கினேன்! இதோ இன்றைக்கு பதிவுகள், ஹாட்லைன்கள், மொழியாக்கங்கள் என எதையெதையோ எழுதுவதற்கு 1984-ன் அந்தப் பொழுதுகள் தான் முதற்புள்ளி ! நடுநடுவே B.Com-க்கென படிக்கவும் நேரமெடுத்துக் கொண்டேன்! கொஞ்ச நாட்களில் டிங்-டாங் வேலைக்கு ஆகப் போவதில்லை என்பது புரிபட்ட போது உதயமானது தான் "லயன் காமிக்ஸ்''! And இதோ கிட்டத்தட்ட ஐநூறு மாதங்கள் கழிந்த நிலையில் here we are!

அப்பா இருந்த வரையிலும் இதையெல்லாம் பகிர்ந்தால் அவர் சங்கடப்படுவாரே என்ற எண்ணம் என்னுள் இருந்தது! So இதைப் பற்றியெல்லாம் எங்கேயுமே வாய் திறந்ததில்லை ! But where it all started? என்று அவதானிப்பதானால் 1983-ன் டிசம்பரில் தான் என்பதை எனக்கு நானே நினைவுபடுத்திக் கொள்ளத் தான் இந்த ரிவர்ஸ் கியர் பயணம்! 1983-ன் இருண்ட பொழுதுகளையும், 1984-ன் வெளிச்சக் கீற்றுக்களையும் இன்றைக்கு நிதானமாய் அசை போடும் போது ஒன்று மட்டும் புரிகிறது - தண்ணீருக்குள் இறங்காது நீச்சல் சாத்தியமே ஆகாதென்று ! கடப்பாரை நீச்சலோ, butterfly stroke களோ - எதையேனும் போட்டு தலையினை தண்ணீருக்கு மேலே தக்க வைக்க நமது survival instinct உதவிடும் என்று நம்பணும் போலும் ! Of course - எதுவும் வேலைக்கு ஆகாமல் போய் தண்ணீருக்குள் சுவாஹா ஆகிடவும் வாய்ப்புண்டு தான் ; but புனித மனிடோ கரம் தராது போக மாட்டாரென்றும் நம்ப வேணும் போலும் ! புதிய தத்துவம் # 4941 .....!

Moving on : இதோ - ஜூலையில் காத்துள்ள நம்ம மஞ்ச சொக்காய் கார்ட்டூன் தலயின் சாகசத்தின் அட்டைப்படப் preview ! வழக்கம் போலவே 2 கதைகள் ! இம்முறையே இரண்டும் வெவ்வேறு காலகட்டங்களிலிருந்து ! முதலாம் சாகசம் ஜாம்பவான் கோசினி கைவண்ணத்தில் - "ஒரு நாயகன் உதயமாகிறான்" !! இங்கே நம்ம ரின்டின் கேன் முதன்முறையாக டால்டன்களோடு அறிமுகம் காணும் படலம் அரங்கேறிடுகிறது ! இரண்டாம் கதையோ தொடரின் பிற்பகுதியினைச் சார்ந்தது ! "நல்ல காலம் பிறக்குது" ஆல்பத்திலும் டால்டன்கள் + ரின்டின் கேன் லூட்டிகள் உண்டு ! So உங்களுக்கு மட்டுமன்றி, உங்க வீட்டு குட்டீஸ்களுக்குமே ஒரு breezy read வெயிட்டிங் என்பேன் !

ரைட்டு.. இளவரசியோடு ஒரு பக்கமும், டேங்கோவோடு இன்னொரு பக்கமும் சாகஸம் பண்ணப் புறப்படுகிறேன்! கிளம்பும் முன்னே ஒரேயொரு (ஜா­லி) கேள்வி மட்டும் :

1983ல் நீங்கள் பிறந்திருந்தீர்களா மகாஜனங்களே? ஆமாம் - எனில் என்ன செய்து கொண்டிருந்தீர்களோ? Just curious!

Bye all.. Have a great weekend! See you around!